கர்நாடகாவில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்

அரசியல் இந்தியா

கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் பகல் 1 மணி நிலவரப்படி பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில் 130 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மே 13) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

ஆரம்பம் முதலே பெரும்பான்மையான தொகுதிகளில் வாக்குகளை தன் பக்கம் கவர்ந்த காங்கிரஸ் பகல் 1 மணி நேர நிலவரப்படி 38 தொகுதிகளில் வெற்றியுடன் 130 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

இதன்மூலம் கர்நாடகவில் தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

அதே வேளையில் பாஜக 16 தொகுதிகளில் வெற்றியுடன் 66 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

மதச்சார்பற்ற ஜனதா தளம் 4 இடங்களில் வெற்றியுடன் 22 இடங்களிலும், பிற கட்சிகள் 6 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன.

congress touching the success

இந்நிலையில் தேர்தல் ஆணையமும் பகல் ஒரு மணிக்கு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், காங்கிரஸ் கட்சி 3 வெற்றியுடன் 132 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 66 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 22 மற்றும் பிற கட்சிகள் 4 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.

கிறிஸ்டோபர் ஜெமா

கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை : 12 மணி நிலவரம்!

வைரலாகும் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
1
+1
0