காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 19) காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்… மாலை நான்கு மணி அளவில் அடுத்த காங்கிரஸ் கட்சி தலைவர் யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக போட்டியிடும் சசி தரூர் தரப்பில் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மதுசூதனன் மேஸ்திரிக்கு கடிதம் எழுதியுள்ளார்கள்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் சசி தரூரின் தலைமை தேர்தல் ஏஜென்ட் சல்மான் சோஸ் இந்த கடிதத்தை தேர்தல் நடத்தும் அலுவலரான மதுசூதன் மிஸ்திரிக்கு அக்டோபர் 18 ஆம் தேதி எழுதியுள்ளார்.
“உத்தரபிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் வாக்குப் பெட்டிகள் முறையாக சீல் வைக்கப்படவில்லை.
இரண்டு மாநிலங்களில் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்களே தேர்தல் நாள் அன்று வாக்காளர் அடையாள அட்டைகளை தங்களது மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களுக்கு விநியோகித்தனர்.
அவர்கள் கார்கேவுக்கு ஆதரவாக வெளிப்படையாக வாக்கு கேட்டனர்.
உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடந்த விதம் வெளிப்படையான முறையில் தேர்தல் நடக்கவில்லை என்பதை காட்டுகிறது.
எனவே உத்தர பிரதேச மாநிலத்தில் பதிவான அனைத்து வாக்குகளையும் செல்லாததாக அறிவிக்க வேண்டும்” என்று அந்த கடிதத்தில் சசி தரூரின் தலைமை ஏஜென்ட் சல்மான் சோஸ் வலியுறுத்தியுள்ளார்.
–வேந்தன்
ஜெ. மரணம்: ஆறுமுகசாமி அறிக்கையை அரசியலாக்கிவிட்டனர்-சசிகலா
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை: ஸ்டாலின் முன் உள்ள வாய்ப்புகள் என்ன?