ஐந்து மாநில தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அரசியல் இந்தியா

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது.

அதன்படி தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30, ராஜஸ்தான் நவம்பர் 25, மத்திய பிரதேசம் நவம்பர் 17, மிசோரம் நவம்பர் 7, சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது,

இந்தநிலையில் மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, மத்திய பிரேதச மாநிலத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் முதற்கட்டமாக 144 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். முன்னாள் முதல்வர் கமல்நாத் சின்ட்வாரா தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங் மகன் ஜெய்வர்தன் சிங் ராகிகத் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ் ராஜ் சிங் செளகான் போட்டியிடும் புத்னி தொகுதியில் விக்ரம் மாஸ்தல் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பூபேஷ் பாகல் பாடன் தொகுதியிலும்,துணை முதல்வர் சிங் டியோ அம்பிகாபூர் தொகுதியிலும், காங்கிரஸ் தலைவர் அமர்ஜித் பகத் சித்தாபூரிலும் போட்டியிடுகின்றனர்.

தெலங்கானா மாநிலத்தில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 55 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானா காங்கிரஸ் கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டி கோடங்கல் தொகுதியிலும், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜீவன் ரெட்டி ஜக்தியால் தொகுதியிலும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

செல்வம்

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

பாகிஸ்தான் வீரருக்கு எதிராக ஜெய் ஸ்ரீராம் கோஷம்: உதயநிதி கண்டனம்!

சண்டே ஸ்பெஷல்: கிரீன் டீ பிரியரா நீங்கள்? அளவுக்கு அதிகமாகக் குடிப்பது ஆபத்து!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *