மயிலாடுதுறை தொகுதியின் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி இன்று (மார்ச் 26) அறிவித்துள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் திமுக போட்டியிட்டு வெற்றிபெற்றது. 2024 மக்களவை தேர்தலுக்கு இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மயிலாடுதுறை ஒதுக்கப்பட்டது.
இந்த தொகுதிக்கு வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று இரவு அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு மாநில மகிளா காங்கிரஸ் தலைவரும், வழக்கறிஞருமான ஆர். சுதாவை மயிலாடுதுறை வேட்பாளராக நிறுத்தியுள்ளது காங்கிரஸ் கட்சி.
இவர் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி பாத யாத்திரை சென்ற போது அவருடன் சென்ற பாத யாத்திரிகர்களில் ஒருவர் ஆவார்.
மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் பாபு, பாமக சார்பில் ம.க.ஸ்டாலின் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹரி – விஷால் படத்தின் புது அப்டேட் இதோ..!
இரட்டை இலை… பக்கெட்… : தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் புதிய மனு!