டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

ஈபிஎஸ் உண்ணாவிரதம் அனுமதி மறுப்பு!

எதிர்கட்சித் துணை தலைவராக ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்காததற்கு எதிரிப்பு தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அறிவிக்கப்பட்டிருந்த ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் வாக்கு எண்ணிக்கை!

அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் பதவிக்காக நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.

ஞானவாபி மசூதி மனு விசாரணை!

ஞானவாபி மசூதி நிர்வாகக் குழு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

வானிலை நிலவரம்!

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கடலூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

பெட்ரோல் டீசல் விலை!

சென்னையில் இன்று 151வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ. 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ரயில் முன்பதிவு தொடங்குகிறது!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகக் காரைக்குடி வழியாகத் தாம்பரம் – திருநெல்வேலி இடையே இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் கலந்தாய்வு!

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

சர்தார் ஆல்பம்!

கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள சர்தார் படத்தின் முழு ஆல்பம் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று இசையமைப்பாளர் ஜி.வி. பிராகாஷ் அறிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை!

டி20 உலகக் கோப்பை தொடருக்கான கடைசி பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இன்று நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது.

புரோ கபடி!

புரோ கபடி லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் – யூபி யோத்தா மற்றும் பெங்களூரு புள்ஸ் – தமிழ் தலைவாஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

கல்லூரி மாணவிகளை பாதுகாக்க ‘போலீஸ் அக்கா’!

கிச்சன் கீர்த்தனா : மத்தி மீன் குருமா!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *