கடந்த சில நாட்களாகக் காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதலில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரான போது அமலாக்கத் துறையைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.
அதைத்தொடர்ந்து சோனியா காந்தி அமலாக்கத் துறையில் ஆஜரான போது போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
இன்று (ஆகஸ்ட் 5) விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது தமிழக எம்.பி.ஜோதிமணி குண்டுகட்டாக கைது செய்யப்பட்டார். மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பிய ஜோதி மணியை வலுக்கட்டாயமாக போலீசார் வேனில் ஏற்றினர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் காங்கிரஸ் கட்சியினரால் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.
இதனைத் தானும் ரீட்வீட் செய்துள்ள ஜோதிமணி, “இரக்கமற்று மக்களைச் சித்திரவதை செய்யும் மோடியின் கொடுங்கோன்மை ஆட்சியில், விலைவாசி உயர்வு,வேலைவாய்ப்பின்மை,ஜி.எஸ்.டி வரிக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தில் எங்கள் மீதான டெல்லி காவல்துறையின் அடக்குமுறை. அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம். மக்களுக்காகக் களம் காண்போம்” என்று பதிவிட்டுள்ளார்.
அண்மையில் விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் ஜோதிமணி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
மோடியை பார்த்து எனக்கு பயமில்லை: ராகுல்