கடந்த இரு வாரங்களாக அரசியல் ரீதியாக ‘தலைமறைவாக’வே இருக்கும் விளவங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, நாளை (பிப்ரவரி 24) பாஜகவில் இணைகிறார்.
வரும் 28 ஆம் தேதி நெல்லையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பாஜக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பெல் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கான பூமி பூஜையில் பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார். இந்த பொதுக் கூட்டத்தில் மோடி முன்னிலையில் விஜயதரணி பாஜகவில் இணையலாம் என்று குமரி வட்டாரத்தில் பேசப்பட்டது.
காங்கிரஸ் தரப்பிலிருந்து புதிய தலைவர் செல்வப் பெருந்தகை, கன்னியாகுமரி சக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் என எவரது அலைபேசி அழைப்புக்கும் பதிலளிக்காத விஜயதரணி டெல்லியில்தான் தொடர்ந்து முகாமிட்டு வருகிறார்.
இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் நாளை (பிப்ரவரி 24) டெல்லியில் விஜயதரணி பாஜகவில் இணைகிறார். இதை டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
வேட்டையன், விடாமுயற்சி, GOAT, கங்குவா படங்களின் ரிலீஸ் எப்போது?
குக் வித் கோமாளி ஷோவில் இருந்து விலகும் பிரபல செஃப்!
Let her first resign her MLA post elected on Congress ticket and establish political morality before leaving Congress party.
இருக்கற கொஞ்சம் நல்ல பேரையும் கெடுத்துகிட்டு, பாவம், ஆசை யாரை விட்டது?
விஜயதாரணி பெரிய அரசியல்வாதியில்லை. பணம்தான் முதலிடம். காங்கிரஸில் இருந்தவரை சம்பாதித்தார்,இப்போ நிறைய பணம் கொடுத்தால் வேறு கட்சிக்கு போகிறார்..இவருக்கு போகிற இடத்தில் எப்படி மரியாதை…பாவம் பெண்ணாயிருப்பதால் சொல்ல தெரியவில்லை….பணம் எப்போதுமே வீண்தான்…..அரசியல்வாதிக்கு….சுவடு முக்கியம்….பத்தோடு இது ஒன்று என்ற கணக்குதான்…பீஜேபீ யில் ஆண்களே முழிபிதுங்கி ஒதுங்குகிறார்கள் ….இது எப்படியோ?