நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி பாஜகவில் இன்று (பிப்ரவரி 24) இணைந்தார்.
கடந்த இரு வாரங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த விஜயதரணி, பாஜகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகின. காங்கிரஸ் தரப்பிலிருந்து புதிய தலைவர் செல்வப் பெருந்தகை, கன்னியாகுமரி சக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அலைபேசி அழைப்புகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை.
இந்த நிலையில், டெல்லியில் இன்று (பிப்ரவரி 24) விஜயதரணி பாஜகவில் இணைகிறார் என்று, டாடா… பைபை…. நாளை பாஜகவில் இணைகிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் நேற்று (பிப்ரவரி 23) நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதன்படி, காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். விஜயதரணி பாஜகவில் இணைந்துள்ளது அரசியல் அரங்கில் மிக முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழர் உரிமை மீட்போம்: மக்களவை தேர்தல் பரப்புரையை துவங்கிய அதிமுக
‘சர்ருன்னு’ உயர்ந்த தங்கம்… 1 கிராம் எவ்வளவுன்னு பாருங்க!