காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இன்று (ஏப்ரல் 5) வெளியிட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகள்:
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
நீட், க்யூட் தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பத்திற்கு ஏற்றபடி நடத்திக்கொள்ளலாம்.
மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும்.
மகளிருக்கு வருடத்திற்கு ரூ.1 லட்சம் மகாலட்சுமி திட்டத்தின் மூலம் வழங்கப்படும்
மாநில அரசுகளை கலந்தாலோசித்த பிறகே புதிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்படும்.
மத்திய அரசில் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்.
இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும்.
ஏழைகளுக்கான மருத்துவ காப்பீடு ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஐ.பெரியசாமி மேல்முறையீடு: உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 8-ல் விசாரணை!
GOLD RATE: குறைந்தது விலை… சவரன் எவ்வளவுன்னு செக் பண்ணிக்கங்க!