ஹரியானா மற்றும் ஜம்மு – காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 8) காலை துவங்கியுள்ள நிலையில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
ஜம்முகாஷ்மீரில் மூன்று கட்டங்களாகவும், ஹரியானாவில் ஒரே கட்டமாகவும் அங்குள்ள 90 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து ஜம்முகாஷ்மீரிலும், ஹரியானாவிலும் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. அதன்படி முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, யூனியன் பிரதேசமான பின் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற இந்த முதல் தேர்தலில் மொத்தம் 63.45 சதவீத வாக்குகள் பதிவாகின. அதனையடுத்து இன்று 20 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இங்கு வெற்றி பெற 46 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் தற்போதைய நிலவரப்படி தேசிய மாநாடு – காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணி 45 தொகுதிகளிலும், பாஜக 28 தொகுதிகளிலும், பிடிபி 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
ஹரியானாவை பொறுத்தவரை தேர்தலில் 65.65 சதவீத வாக்குகள் பதிவாகின. வெற்றி பெற 46 தொகுதிகள் வேண்டும் என்ற நிலையில் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 56 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. ஆளும் பாஜக 23 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இரு இடங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் ஒருவருக்கொருவர் இனிப்பு ஊட்டிவிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பிக் பாஸ் சீசன் 8 : சாச்சனாவுக்கு நேர்ந்தது அநியாயமா?
நீலகிரி: இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய ஆ.ராசாவிடம் கோரிக்கை!