நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் காங்கிரஸின் செயல்பாடுகள் குறித்து இன்று (டிசம்பர் 3) டெல்லியில் ஆலோசிக்கப்பட இருக்கிறது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் டிசம்பர் 7ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதையடுத்து, இந்தக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக, அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.
இக்கூட்டம் டெல்லியில் உள்ள முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்ற பின்னர் நடைபெறுகிற முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இதுதான்.
இக்கூட்டத்தில், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை காங்கிரஸ் தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ், மக்களவை காங்கிரஸ் தலைமை கொறடா கே.சுரேஷ், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், மணிஷ் திவாரி உள்ளிட்ட பல தலைவர்கள் இதில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி எழுப்ப வேண்டிய பிரச்சினைகள், பின்பற்ற வேண்டிய உத்திகள் பற்றி விவாதிக்கப்பட இருக்கிறது.
மேலும், குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச மாநிலங்களின் சட்டப் பேரவை தேர்தல்களின் முடிவுகளும் டிசம்பர் 8ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதுகுறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது.
ஜெ.பிரகாஷ்
கிச்சன் கீர்த்தனா : ஆலு – புதினா பரோட்டா
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!