உள்நோக்கத்துடன் கிசான் நிதி விடுவிப்பு : காங்கிரஸ் விமர்சனம்!

அரசியல் இந்தியா

பிரதமரின் பிஎம் – கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தலா ரூ.2000 இன்று (நவம்பர் 15) விடுவிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்ததோடு மோடி அரசாங்கத்தின் இந்த செயல் தேர்தலை மனதில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் விமர்சித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி 2019ல் பிஎம் – கிசான் எனப்படும் விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை திட்டத்தைத் தொடங்கினார்.  இத்திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.6000, அதாவது தவணைக்கு தலா ரூ.2000 வீதம் மூன்று தவணைகளில், நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் அவர்கள் தங்களின் வாழ்வாதார இலக்குகளை அடைய உதவுவதற்கும் இந்த உதவி அளிக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பிஎம் – கிசான் 15வது தவணை இன்று விடுவிக்கப்பட்டது. இதன்மூலம், நாடு முழுவதும் 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக தலா ரூ. 2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 16,800 கோடி டெபாசிட் செய்யப்பட்டது.

இந்தசூழலில் மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது.

சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில், 70 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல், ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கும் வரும் 25ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு வரும் 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் நெருங்கிவிட்ட இந்த நிலையில்,பிஜேபி அரசாங்கம் பிஎம் கிசான் நிதியை விடுவிப்பது உள்நோக்கம் கொண்டது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “15வது பிஎம் கிசான் நிதி இன்று விடுவிக்கப்படுகிறது. சத்தீஸ்கரிலும், மத்தியப் பிரதேசத்திலும் தேர்தல் நடைபெற இன்னும் 2 நாட்களே உள்ளன. ராஜஸ்தானில் தேர்தல் நடைபெற இன்னும் 10 நாட்களும், தெலங்கானாவில் தேர்தல் நடைபெற இன்னும் 15 நாட்களுமே உள்ளன. இந்த சூழலில் பிஎம் கிசான் நிதி விடுவிக்கப்படுகிறது. தாமதப்படுத்தி நிதி விடுவிக்கப்படுவது உள்நோக்கம் அற்றதா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

2022, 2021 மற்றும் 2020 இல் இதே காலாண்டுகளின் தவணை முறையே அக்டோபர் 17, ஆகஸ்ட் 9 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சண்முகப் பிரியா

ஸ்டான்லியில் இருந்து ஓமந்தூராருக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜி

சிறையில் என்னவெல்லாம் நடக்கிறது தெரியுமா?: அமர் பிரசாத் பேட்டி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *