காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ரூ.1,740 கோடி அபராதம்: ஐடி நோட்டீஸ்!

காங்கிரஸ் கட்சி மேலும் ரூ.1,740 கோடி அபராதம்  செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2017 – 2021 வரையிலான காங்கிரஸ் கட்சியின் வருமான வரியை மறு மதிப்பீடு செய்யும் பணிகளை வருமான வரித்துறை மேற்கொண்டது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கிலிருந்த ரூ.135 கோடியை வருமான வரித்துறை முடக்கியது.

இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், டெல்லி உயர்நீதிமன்றம் வருமான வரி தொடர்பான விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று தெரிவித்துவிட்டது.

இந்தநிலையில், 2017 – 2021 வரை ரூ.1,823 கோடி வரி பாக்கி உள்ளதாக, காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியை முடக்கும் வேலையில் மத்திய பாஜக அரசு ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் குற்றம் சாட்டினர். இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று (மார்ச் 30) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், 2014 – 15 மற்றும் 2016 – 17 காலகட்டத்தில்  ரூ.1,745 கோடி வரி பாக்கி இருப்பதாக புதிய நோட்டீஸ் ஒன்றை  வருமான வரித்துறை அனுப்பியுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியின் அபராத தொகை தற்போது ரூ.3,600 கோடியாக உயர்ந்துள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

CSK Vs DC: டெல்லிக்கு எதிராக களமிறங்கும் இளம்வீரர்… தோனிக்கு என்னாச்சு?

கெஜ்ரிவால் பாஜகவில் இணைந்தால் புனிதர்: உத்தவ் தாக்கரே பேச்சு!

 

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts