ஈரோடு கிழக்கு தொகுதி: காங்கிரஸ் போட்டி!

அரசியல்

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரக இருந்த திருமகன் ஈவெரா அண்மையில் மாரடைப்பு காரணமாக காலமானார். இதையடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதி காலி என அறிவிக்கப்பட்டதுடன் இடைத்தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு திமுக போட்டியிடுமா அல்லது மீண்டும் காங்கிரஸ் கட்சியே களம் காணுமா என விவாதங்கள் நடந்து வந்தன.

 

இந்நிலையில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இன்று (ஜனவரி 19 ) நடைபெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

+1
0
+1
0
+1
0
+1
7
+1
0
+1
0
+1
0