டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு!

அரசியல்

டெல்லி சட்டப்பேரவையில் நாளை (ஆகஸ்ட் 30) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இதனால், டெல்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதில் மொத்தமுள்ள 70 உறுப்பினர்களில், 62 பேர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள்.

எனினும், அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதால், டெல்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலால் பிஜேபிக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

இதுதொடர்பாக பிஜேபி மூத்த நிர்வாகிகள் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசிவருவதாகவும், இதற்காக பிஜேபி 800 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை பிஜேபியால் பேரம் பேச முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, டெல்லி சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 29) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஆம் ஆத்மி – பிஜேபி கட்சியினர் இடையே அமளி எழுந்தது. இதன் காரணமாக, சட்டசபை நாளை (ஆகஸ்ட் 30) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, டெல்லி சட்டப்பேரவை நாளை மீண்டும் கூடியதும், அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னெடுக்க இருக்கிறார்.

ஜெ.பிரகாஷ்

277 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிய பாஜக : கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.