மோடிக்கு ஆறுதல்: ஸ்டாலின், எடப்பாடி தனித்தனியாக பயணம்!

அரசியல்

பிரதமர் மோடியின் தாயார் மறைவையொட்டி இரங்கல் தெரிவிக்க முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும் நேரில் செல்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி(100 வயது). நேற்று முன்தினம் பிற்பகலில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மேதா என்ற தனியார் மருத்துவமனையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.30மணிக்கு ஹீராபென்மோடி உயிரிழந்தார். ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்திருக்கிறது. துறவியின் பயணம், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளம், மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை தனது தாயாரிடம் உணர்ந்தேன்.

தாயாரின் நூறாவது பிறந்தநாள் சந்திப்பின்போது புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யவேண்டும். தூய்மையான வாழ்க்கையை வாழவேண்டும் என ஹீராபென் மோடி தன்னிடம் இறுதியாக கூறிய அறிவுரை என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

Condolences to Prime Minister

ஹீராபென் மோடி மறைவையொட்டி பிரதமர் நரேந்திர மோடியின் பல்வேறு அரசு முறை பயணங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் வந்தே பாரத் ரயில் தொடக்கவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பங்கேற்பார் எனவும் பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹீராபென் மோடியின் மறைவையொட்டி மத்திய அமைச்சர்களும், பல்வேறு மாநில முதலமைச்சர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பிரதமரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் செல்கின்றனர்.

மூன்று நாட்களாக சேலம் வீட்டில் முகாமிட்டிருந்த எடப்பாடி பழனிச்சாமி காலை 9 மணி அளவில் வீட்டிலிருந்து கோவை விமான நிலையம் சென்றார். அங்கிருந்து 11.40 மணிக்கு விமானத்தில் அகமதாபாத் செல்கிறார்.

இதேபோன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 4.15 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் டெல்லி செல்கின்றார்.

இன்று இரவு டெல்லி செல்லும் முதலமைச்சர் நாளை காலை டெல்லியில் பிரதமரை நேரில் சந்தித்து தனது இரங்கலை தெரிவிக்க இருக்கிறார்.

கலை.ரா

நடிகை கொலை: பணத்திற்காக கணவரே கொன்று நாடகமா?

கார் விபத்து: படுகாயமடைந்த ரிஷப் பண்ட்

+1
0
+1
1
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *