தமிழக சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 7) இரண்டாவது நாளாக நடைபெற்றது. இன்றும், அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் ‘யார் அந்த சார்?’ என்ற பேட்ஜை அணிந்து சட்டப்பேரவைக்குள் வருகை தந்தனர்.
தொடர்ந்து அவை கூடியதும் சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எழுந்து நின்று இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து அவை நாளை காலை 9.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக மன்மோகன் சிங் கடந்த டிசம்பர் 26ஆம் தேதியும், ஈவிகேஎஸ் இளங்கோவன் டிசம்பர் 14ஆம் தேதியும் உடல் நலக் குறைவால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அந்த மாணவிக்காக… முருகனிடம் உருகிய சிவகார்த்திகேயன்
டாப் 10 செய்திகள் : ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் முதல் தமிழகத்தில் HMPV பாதிப்பு வரை!