சென்னையில் தொழில் வளர்ச்சி 4.0 மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
தரமணி டைடல் பார்க்கில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சித்துறை சார்பில் தொழில்வளர்ச்சி 4.0 மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனை இன்று(நவம்பர் 8) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநாட்டை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த ட்ரோன்களுக்கான கண்காட்சி அரங்கையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.
இந்த மாநாட்டில், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன, அதன் மூலம் கிடைத்த தொழில் மற்றும் வேலை வாய்ப்பு குறித்த விரிவாக தகவல்கள் வெளியிடப்பட இருக்கின்றன.
மேலும் தொழில்வளர்ச்சி 4.0 மாநாட்டில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கின்றன. இதன் மூலமாக அதிகளவில் முதலீடுகள் வர வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் தமிழ்நாடு தொழில் நிறுவன சிறப்பு மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
தமிழக விண்வெளி, பாதுகாப்பு தொழில் கொள்கை 2022-ம் வெளியிடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை முதன்மைச் செயலர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
கலை.ரா