யாதவ சமுதாயத்தை இழிவுப்படுத்தி பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் அக்டோபர் 14 பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் சீமான், யாதவர் சமுதாயத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, சென்னை வேப்பேரியில் உள்ள காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் யாதவ அமைப்புகளை சேர்ந்த வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் காசிராஜன், உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு யாதவர் சமூகத்தினர் சார்பில் இரங்கல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
ஆனால் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், இதனை கொச்சைப்படுத்தும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த கோனார், இடையர் உள்ளிட்ட சமுதாயத்தினர் முலாயம் சிங் யாதவ் உயிரிழப்புக்கு எதற்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என பேசினார்.
அத்துடன் யாதவர் சமூகம் குறித்து பல இழிவான கருத்துக்களையும் தெரிவித்தார். எனவே அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டதாகக் கூறினார்.
கலை.ரா
காயமடைந்த மீனவருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு!
தேனி எம்.பி ரவீந்திரநாத் ஆஜராக வனத்துறை சம்மன்!