திமுக மீது புகார்: ஆளுநரை சந்திக்கும் ஈபிஎஸ்

Published On:

| By Kavi

திமுக மீது புகார் அளிக்க அதிமுகவினர் ஆளுநரை சந்திக்கவுள்ளனர்.

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று அதிமுக குற்றம்சாட்டி வரும் நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

இந்நிலையில் ஆளுநரைச் சந்தித்து திமுக அரசின் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க இருப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.

அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 18) வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

“திமுக ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 22ஆம் தேதி காலை 10.25 மணிக்கு,

சென்னை, சின்னமலை, தாலுகா அலுவலகம் சாலை, இயேசு கிறிஸ்து சபை அருகிலிருந்து, பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாகப் புறப்பட்டு, ஆளுநர் மாளிகை சென்றடைந்து, முக்கிய கழக நிர்வாகிகள் ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

கர்நாடக முதல்வர் யார்?: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஜல்லிக்கட்டு தீர்ப்பு – அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி : விஜயபாஸ்கர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel