ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியா? – ஓபிஎஸ் வைத்திருக்கும் திட்டம்!

Published On:

| By Kalai

Erode East Constituency OPS Plan

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் அறிவிப்பார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவால் காலியான ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இது பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.

திமுகவிற்கு மக்களிடம் உள்ள செல்வாக்கை நிரூபிக்கும் விதமாகவும், அரசு மீது அதிமுக கூறிவரும் குற்றச்சாட்டு உண்மைதானா என்பதை எடுத்துக்காட்டும் தேர்தலாக இது இருக்கிறது.

எனவே இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்று இரண்டு கட்சிகளுமே தீவிரம் காட்டி வருகின்றன.

இந்தநிலையில் ஏற்கனவே வெற்றி பெற்றதால் காங்கிரஸ் கட்சியே ஈரோடு கிழக்கில் மீண்டும் போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதே வேளையில், கடந்த தேர்தலில் தமாகாவுக்கு வாய்ப்பளித்து தோல்வியை சந்தித்ததால் இந்தமுறை அதிமுகவே களத்தில் இறங்க முடிவு செய்து ஜி.கே.வாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.

அதை ஏற்றுக் கொண்ட வாசனும் அதிமுகவே போட்டியிடும் என்று தெரிவித்தார். இதற்கிடையில் அதிமுகவில் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கா, ஓ.பன்னீர்செல்வத்துக்கா என்ற போட்டியும் நிலவி வருகிறது.

அதை நிரூபிக்க இடைத்தேர்தலை பயன்படுத்திக் கொள்ள ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம், வரும் 23ம் தேதி தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

அப்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், வேட்பாளர் தேர்வு குறித்தும் ஆலோசித்து முடிவெடுப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே அதிமுக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே வேட்பாளரை நிறுத்தினால் சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பும் நிலவி வருகிறது.

கலை.ரா

குடியரசு தினவிழா: தலைமைச் செயலாளர் போட்ட உத்தரவு!

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share