திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்கும் சிபிஐ!
மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று (பிப்ரவரி 3) பேச்சுவார்த்தை நடத்தியது.
அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர். பாலு தலைமையிலான அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர்களான திருச்சி சிவா, ஆ. ராசா மற்றும் பொன்முடி அடங்கிய குழுவினருடன்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுப்பராயன் எம்.பி., துணைச் செயலாளர் வீரபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த தேர்தலைக் காட்டிலும் இந்த தேர்தலில் கூடுதல் தொகுதி கொடுக்க வேண்டும் என்று பட்டியல் கொடுத்துள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் குழு செய்தியாளர்களைச் சந்தித்தது.
அப்போது, “தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது. தொடக்கம் மிக நன்றாக இருந்தது. ஒரு இணக்கமான அணுகுமுறையை நாங்கள் பார்த்தோம். எனவே நல்லதே நடக்கும். நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
எந்த தொகுதியை கேட்போம் என்பது இங்கே பகிர்ந்துகொள்ளும் நிலையில் இல்லை. கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகளைத் தான் கேட்டுள்ளோம்.
இப்போது சீட் பிரச்சினையை பற்றி பேசுவது என்பது மக்களவைக்கு மட்டும் தான். மாநிலங்களவை பற்றி இல்லை.
மக்களவையில் எங்களுக்கு எவ்வளவு பங்கீடு வேண்டும் என்ற பட்டியலை கொடுத்திருக்கிறோம். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை, முதல்வர் 7அம் தேதி வந்த பின்னர் நடைபெறும்” என்று தெரிவித்தனர்.
2019 தேர்தலில் திருப்பூர், நாகை ஆகிய தொகுதிகள் சிபிஐக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த 28ஆம் தேதி காங்கிரஸுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
விஜய்யை வழிநடத்தும் ‘ஜெயலலிதா’ ஜோசியர்!
Thalapathy69: வெளியான புதிய அப்டேட்… ஒவ்வொரு சீனும் தெறிக்க போகுது!