நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் இன்று (பிப்ரவரி 5) தேர்தல் பணிக்காக 38 குழுக்களை அமைத்துள்ளார் அண்ணாமலை.
சென்னை அமைந்தகரையில் பாஜக தலைமை தேர்தல் அலுவலகத்தை மாநில தலைவர் அண்ணாமலை இன்று திறந்து வைத்தார்.
அப்போது, நாடாளுமன்ற தேர்தலுக்காக 38 குழுக்களை அமைத்தும் அறிவிப்பு வெளியிட்டார்.
அதில், பாஜக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு தலைவராக சக்கரவர்த்தியும், துணை தலைவர்களாக கே.எஸ்.நரேந்திரன், நாராயண் திருப்பதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தேர்தல் அலுவலக குழுவில் அமர் பிரசாத் ரெட்டி, மாலா செல்வகுமார், காயத்ரி ஸ்ரீனிவாஸ், அலுவலக மேலாண்மை குழுவில் எம்.சந்திரன், பிரமிளா சம்பத்,
ஊடக குழுவில் ரங்கநாயகுலு (எ) ஸ்ரீரங்கா, எஸ்.என்.பாலாஜி, எம்.ஜெயகுரு, செளமியா ராணி பிரதீப்,
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் எச்.ராஜா தலைமையில் கே.பி.ராமலிங்கம், கார்வேந்தன், பேராசிரியர் ராம சீனிவாசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
குற்றப்பத்திரிகை தயாரிக்க பாஜக மாநில செயலாளர்கள் எஸ்ஜி சூர்யா, அஸ்வத்தாமன் ஆகியோர் கொண்ட தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று மகளிர் பிரச்சாரக்குழு, இளைஞர் பிரச்சாரக்குழு, பட்டியல் இனத்தைச் சேர்ந்த பிரச்சாரக் குழு, அலுவலக நிர்வாகம், பிரச்சார உரை தயாரிப்புக் குழு என தனித் தனியாக 38 குழுக்களை அமைத்துள்ளார் அண்ணாமலை.
முன்னதாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் குழுக்களை அமைத்து பணிகளை தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
நாடாளுமன்ற தேர்தல் எப்போது? – அண்ணாமலை தகவல்!
ஜி.வி.பிரகாஷ் 25வது படத்தின் ஷூட்டிங் ஓவர்!