கமிஷன் வாங்கும் கமிஷனர்: திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அந்த கூட்டத்தில் திமுக எம்எல்ஏ ஒருவர், “கமிஷன் வாங்கும் கமிஷனர்” என வெளிப்படையாக குற்றம்சாட்டியது அதிகாரிகளை அதிரவைத்துள்ளது.

முதல்வர் அறிவித்த உங்கள் தொகுதியின் பத்து கோரிக்கைகள் பற்றி அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் அனைத்து துறையின் அதிகாரிகள் எம்எல்ஏக்களை அழைத்து,

எந்தந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும், எவற்றை நிறைவேற்ற முடியாது என்பதுபற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று (அக்டோபர் 12) கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் தலைமையில்,

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன், கடலூர் திமுக எம்எல்ஏ ஐய்யப்பன், புவனகிரி தொகுதி அதிமுக எம்எல்ஏ அருள்மொழிதேவன், சிதம்பரம் அதிமுக எம்எல்ஏ பாண்டியன்,

காட்டுமன்னார்கோயில் விசிக எம்எல்ஏ சிந்தனைசெல்வன், விருத்தாசலம் காங்கிரஸ் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், நெய்வேலி தொகுதி திமுக எம்எல்ஏ சபா இராசேந்திரன் மற்றும் அனைத்துத் துறையின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Commissioner buying commission:

கூட்டம் காலை 11.00 மணிக்கு துவங்கி மதியம் 1.45 மணிக்கு நிறைவு பெற்றது. கூட்டத்தில் ஒவ்வொரு தொகுதியாக பேசப்பட்டது, கடலூர் தொகுதி கோரிக்கைகளைப் பற்றி விவாதித்தபோது, திமுக எம்எல்ஏ ஐய்யப்பன் திடிரென மைக் பிடித்து,

”கடலூர் மாநகராட்சி கமிஷனர் கமிஷன் வாங்கும் வேலையைதான் பார்க்கிறார்” என்றதும் கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும், எம்எல்ஏ ஐய்யப்பனையும் கமிஷனர் நவேந்திரனையும் பார்த்தார்கள்.

கலெக்டர் பாலசுப்பிரமணியன் அப்செட்டாகி சமாளிக்கும் வகையில் அடுத்தத் திட்டத்தைப் பற்றி பேசினார்.

பின்னர், 1.45 மணிக்கு கூட்டம் முடிந்ததும் எம்எல்ஏக்கள் கலெக்டர் மேடையில் இருக்கும்போது கடலூர் மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன் எம்எல்ஏ ஐய்யப்பன் அருகில் சென்று,

”என்ன சார், இப்படி பேசிட்டிங்க” என்று கேட்க, ”அதைவிடுங்க” என சில விஷயங்களைப் பேசிவிட்டு வெளியேறினார்கள்.

-வணங்காமுடி

மியான்மர் வேலை மோசடி: இருவர் கைது!

சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி முடிவு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts