வணிகவரி சோதனை பழிவாங்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறதா? அமைச்சர் மூர்த்தி பதில்!

அரசியல்

வணிகவரித் துறை சோதனைகள் பழிவாங்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறதா என்கிற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, அது சுதந்திரமாக செயல்படுகிறது எனவும் அதில் யாருடைய தலையீடும் இல்லை எனவும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரை ஒத்தகடை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்  கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி  செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, “வணிகவரி சோதனைகள் பழிவாங்கும் நோக்கத்துடன் நடத்தப்படுவதில்லை.

வணிகவரித் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் காரணமாக வரி செலுத்தாத வணிகர்கள் பயத்தோடு வரி கட்டி வருகிறார்கள்.

கடந்த ஆறு மாத காலத்தில் வணிகவரித் துறை மூலம் 18,000 கோடி ரூபாய் வருவாயும், பத்திரப்பதிவுத் துறை மூலம் 2,300 கோடி ரூபாய் வருவாயும் ஈட்டப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறை மூலம் 1.50 லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வணிகவரி சோதனைகள் நிர்வாக ரீதியாக மேற்கொள்ளப்படுகிறது. அதில் யாருடைய தலையீடும் இல்லை. வணிகவரித் துறை சுதந்திரமாக செயல்படுகிறது.

யாரையும் தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் நடவடிக்கையாக வணிகவரி சோதனைகள் நடத்தப்படுவதில்லை” என்று அமைச்சர் மூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார்.

-ராஜ்

’பொன்னியின் செல்வன்’ படத்தை இணையதளங்களில் வெளியிட தடை!

சிறப்புக் கட்டுரை: பொன்னியின் செல்வன், பெண்களின் செல்வன் ஆக காரணம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.