தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் மீது தான் சுமை அதிகரிக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு மின்வாரியம் இன்று (ஜூன் 8) வெளியிட்ட அறிவிப்பில், ”வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டும் யூனிட்டுக்கு 13 பைசா முதல் 21 பைசா மின் கட்டணம் உயரும். வேளான், குடிசை, விசைத்தறிகளுக்கான இலவச மின்சார சேவைகள் தொடரும்” என்று தெரிவித்துள்ளது.
அதேபோன்று வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இன்றி, அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என்றும் மின் வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்தினால் விலைவாசி ஏறும். இதனால் மக்கள் மீது தான் சுமை அதிகரிக்கும்.
திமுக அரசு பொறுப்பேற்றபோது, பொருளாதார நிபுணர் குழுவை நியமித்தோம் என்று கூறினார்கள். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்களை துன்புறுத்தும் செயலில் தான் ஈடுபட்டு வருகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
யாருக்கு மின் கட்டண உயர்வு? மின்சார வாரியம் அறிவிப்பு!
‘ஆளுநர் கட்சி உறுப்பினர் போல் செயல்படுகிறார்’ – செல்லூர் ராஜூ