கோவை மேயர் தேர்தல்: ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு!

அரசியல்

கோவை மாநகராட்சி மேயராக ரங்கநாயகி இன்று (ஆகஸ்ட் 6) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா, கடந்த ஜூலை 3-ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து இன்று மேயர் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

திமுக சார்பில் மேயர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கோவை பொறுப்பு அமைச்சர் முத்துசாமி ஆகியோர் தலைமையில் நேற்று (ஆகஸ்ட் 5) நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக மின்னம்பலத்தில் நேற்று நாம் செய்தி வெளியிட்டோம்.

அதன்படி, கூட்டத்தின் முடிவில் மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிக்கப்பட்டார்.

இந்தநிலையில், இன்று காலை கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் மேயர் தேர்தலில் போட்டியிட ரங்கநாயகி வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், ரங்கநாயகி போட்டியின்றி வெற்றி பெற்றார்.

கோவையில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சியில் 96 கவுன்சிலர்களும் அதிமுக 3, எஸ்டிபிஐ கட்சியில் 1 கவுன்சிலரும் இருக்கிறார்கள்.

நெல்லை மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பவுல்ராஜ் ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.

இதனையடுத்து, நடைபெற்ற மறைமுக மேயர் தேர்தலில் ராமகிருஷ்ணன் 30 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹேப்பி நியூஸ் மக்களே: தங்கம் விலை குறைஞ்சிடுச்சு… எவ்வளவு தெரியுமா?

வங்கதேச கலவரம்: நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *