கோவையில் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ரூ.42 கோடி கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமானவரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கோவையில் இயங்கி வரும் புல் மெஷின், லட்சுமி டூல்ஸ், ஆதித்யா பேப்பர் பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்கள் மற்றும் அந்நிறுவனத்தின் உரிமையாளர்களான தொழிலதிபர்கள் பொன்னுதுரை, வரதராஜன், பாலசுப்பிரமணியம் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த நான்கு நாட்களாக சோதனை நடத்தி வந்தனர்.
இந்த சோதனையின் போது நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்ததில், வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்தது.
சோதனையின் முடிவில் ரூ.42 கோடி கைப்பற்றப்பட்டதாகவும் 100 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் வருமானவரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தொழிலதிபர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
கடந்த வாரம் அதிமுக சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவனுக்கு சொந்தமான திருச்சி எம்.ஐ.டி வேளாண், பாலிடெக்னிக், மகளிர் கல்லூரிகளில் ஐடி சோதனை நடைபெற்றது. அதேபோல, சென்னையில் உள்ள பிஎஸ்கே கட்டுமான அலுவலகத்திலும் ஐடி சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆட்சியில் பங்கு… ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கடிதம்!
’அட்டைக்கத்தியுடன் போர்க்களத்தில் இறங்கியுள்ளேன் ‘- சாரு நிவேதிதா