கோவை : கணபதி ராஜ்குமார் வெற்றி!

Published On:

| By Kavi

கோவை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றார்.

கோவை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) தடாகம் சாலையில் உள்ள ஜிசிடி கல்லூரியில் எண்ணப்பட்டன.

இதில், தொடக்கம் முதலே திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலையில் இருந்து வந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருந்து வந்தார்.

முடிவில், கணபதி ராஜ்குமார் – 5,68,200 வாக்குகள் பெற்று 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலையை தோற்கடித்தார். அண்ணாமலை 4,50,132 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தையும்

அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 2,36,490 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும்,

நாதக வேட்பாளர் ம.கலாமணி ஜெகநாதன் 82,657 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தையும் பிடித்தனர்.

2019 தேர்தலில் கோவையில் சிபிஐ(எம்) வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை 1,76,918 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

நான்கு தொகுதிகளிலும் வெற்றி… ஸ்வீப் செய்த இடதுசாரிகள்!

9/9 காங்கிரஸ் வெற்றி… டஃப் ஃபைட் கொடுத்த அதிமுக, தேமுதிக!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel