கோவை : முதல் சுற்று முடிவில் திமுக முன்னிலை!

Published On:

| By christopher

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் கோவை தொகுதியில் முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை பெற்றுள்ளார்.

மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் இந்த முறை திமுக நேரடியாக போட்டியிட, அதன் வேட்பாளராக கணபதி ராஜ்குமார் களமிறக்கப்பட்டார். அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிட்டார். மேலும் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவரான அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதனால் நட்சத்திர தொகுதியாக கோவை மாறிய நிலையில், இன்று எண்ணப்படும் வாக்குகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனின் கோவை தெற்கு தொகுதி வாக்கு என்ணும் மையத்தில் இருந்து அதிகாரப்பூர்வ முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5,127 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை 1,852 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் 1,541 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திலும் பின் தங்கியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

வாக்கு எண்ணிக்கை : பாஜக – இந்தியா கூட்டணி முன்னணி நிலவரம் என்ன?

பாஜக 17, காங்கிரஸ் 1 இடங்களில் முன்னிலை – தேர்தல் ஆணையம்!