கோவை: திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் தற்கொலை!

Published On:

| By Selvam

கோவை மேற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பையா என்கிற கிருஷ்ணன் இன்று (ஜனவரி 25) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பையா என்கிற கிருஷ்ணன். இவர் ரியல் எஸ்டேட், விவசாய தொழில்களில் ஈடுபட்டு வந்தார்.

திமுகவின் பல்வேறு பொறுப்புகளில் இருந்துவந்த கிருஷ்ணன், கோவை மேற்கு மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.

கடந்த 2016, 2021 சட்டமன்ற தேர்தல்களில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

கடந்த ஒரு வடத்திற்கு முன்பாக அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. தற்போது கட்சியில் அவர் எந்த பதவியிலும் இல்லாமல் இருந்தார்.

இந்தநிலையில், காளப்பட்டி பகுதியில் உள்ள தனது வீட்டில், இன்று காலை தூக்கிலிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் கிருஷ்ணனை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கோவில்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சர்வதேச படத்தில் இருந்து விலகிய சமந்தா

“சார் என் லைஃப் முடிஞ்சது…” – திருப்பூரில் செய்தியாளருக்கு அரிவாள் வெட்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share