தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு: முதல்வர் ஆலோசனை!

Published On:

| By Kalai

கோவை உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தை தொடர்ந்து, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

கோவையில் கடந்த 23ஆம் தேதி உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஜமேசா முபீன் என்ற இளைஞர் உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஜமேசா முபீன் சதி திட்டத்திற்கான ஏற்பாடுடன் காரில் சிலிண்டரை கொண்டு வந்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து ஜமேசா முபீன் வீட்டில் சோதனையிட்டதில்,  பொட்டாசியம் ஹைட்ரேட் உள்ளிட்ட வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

மேலும், ஜமேசா முபீனுடன் தொடர்பில் இருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் இந்த விவகாரத்தில் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது  குறித்து தீவிர விசாரணையானது  நடைபெற்று வரும் சூழலில், கோவை சம்பவம் மற்றும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மேலும், கடந்த 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் கோவையில் நேரில் ஆய்வு மேற்கொண்டது தொடர்பாகவும் டிஜிபி சைலேந்திரபாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் முதலமைச்சரிடம் தெரிவித்தனர்.

ஆலோசனையில் தலைமைச் செயலர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்தர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், முதலமைச்சர் தனிச்செயலாளர் உதயசந்திரன், பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் உள்ளிட்ட அரசு துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

கலை.ரா

29 ல் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!

ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லக்ஷ்மி படங்கள் : கெஜ்ரிவால் கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment