கோவை கார் வெடிப்பு வழக்கு: என்.ஐ.ஏ விசாரிக்க முதல்வர் பரிந்துரை!

அரசியல்

கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க பரிந்துரை செய்துள்ள முதல்வர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

கோவை, உக்கடம் பகுதியில் 23 ஆம் தேதி நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும்,

துவான சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்தும் தமிழக முதல்வர் தலைமையில் இன்று (அக்.26) தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அதில் தலைமைச் செயலர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்தர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், முதலமைச்சர் தனிச்செயலாளர் உதயசந்திரன், பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் உள்ளிட்ட அரசு துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், கோவை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அப்போது இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்தும், கோவை மாவட்டத்தில் பாதுகாப்பினை மேலும் உறுதி செய்திடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கோவை கார் வெடிப்பு வழக்கில் பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால், இவ்வழக்கின் விசாரணையை என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்க முதல்வர் பரிந்துரை செய்துள்ளார்.

மேலும் கோவை மாநகரின் பாதுகாப்பினை வலுப்படுத்திட கரும்புக் கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை உடனடியாக அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள், சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறாமல் தடுத்திடும் வகையில், காவல் துறையில் ஒரு சிறப்புப் படையை உருவாக்கவும்,  கோவை உட்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும்,

மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய முக்கிய பகுதிகளிலும், கூடுதல் நவீன கண்காணிப்புக் கேமராக்களை விரைவில் பொருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உளவுப் பிரிவில் கூடுதல் காவல் துறை அலுவலர்களை நியமனம் செய்யவும், இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரைப் பற்றியும்,

அவர்களோடு தொடர்பு வைத்திருப்பவர்களைப் பற்றியும் நுண்ணிய தகவல்களை அளிப்போருக்கு தக்க பாதுகாப்பினை வழங்கிடவும், அவர்களை ஊக்குவித்திடவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கலை.ரா

பசும்பொன் செல்லாத எடப்பாடி : ஜெயக்குமார் விளக்கம்!

தீபாவளி படங்கள் : சாதித்த சர்தார் சறுக்கிய பிரின்ஸ்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *