தமிழகத்துக்கு அளித்த ஆதரவிற்கு நன்றி: ராம்நாத் கோவிந்துக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

அரசியல்

ராம்நாத் கோவிந்த் குடியரசு தலைவராக பணி நிறைவு செய்ததற்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ராம்நாத் கோவிந்த் 2017- 2022 வரை இந்திய குடியரசு தலைவராக பதவி வகித்தார். இவருடைய பதவிகாலம் நேற்றுடன் ( ஜூலை 24 ) முடிவடைந்தது.  இன்று புதிய குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றார்.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் பணியை நிறைவு செய்த ராம்நாத் கோவிந்துக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் இந்திய குடியரசுத் தலைவராக பதவிக் காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 2021-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் எனது அழைப்பை ஏற்று தாங்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததை இத்தருணத்தில் நினைவு கூறுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ”நாட்டின் குடியரசு தலைவராக எங்கள் மாநிலத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு தங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். தங்களின் வளமான அனுபவத்தால் நாடு தொடர்ந்து பயன்பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் . நல்ல உடல் நலத்துடன் அமைதியான வாழ்வு அமைந்திட வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மோனிஷா

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *