முதல்வர் இன்று வீடு திரும்புகிறார்!
கொரோனா வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மேலும் சில நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுரை.
இலங்கையை விட்டு வெளியேறத் தடை!
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே நாட்டை வீட்டு வெளியேற தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு. இடைக்கால அதிபராகப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தேர்வு. அவருக்கு எதிராகவும் மக்கள் புரட்சி. சிங்கப்பூர் தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சேவுக்கு 15 நாட்கள் மட்டுமே தங்க அனுமதி.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் 56ஆவது நாளாக மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை
பன்னீருக்கு கொரோனா?
ஓ.பன்னீர் செல்வம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உயரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1,17,613 கன அடியாக அதிகரிப்பு. தற்போது அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 90.926 கன அடியாக உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் 118.39 கன அடியாக உயர்வு.
அரிசிக்கு ஜி.எஸ்.டி : ஆலைகள் ஸ்டிரைக்!
அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டதற்குக் கண்டனம்.தமிழ்நாட்டில் அரிசி ஆலைகள், கடைகள் இன்று (ஜூலை 16) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்.
சபரிமலை நடை திறப்பு!
ஆடி மாத பூஜைக்காகச் சபரிமலையில் கோயில் நடை இன்று (ஜூலை 16) மாலை 5 மணிக்குத் திறக்கப்படுகிறது. சிறப்புப் பூஜைகள் நடைபெறாது என்பதால் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட உள்ளது.
டிஎன்பிஎஸ்சி முடிவுகள்: – பெண்கள் சாதனை!
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு. செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த லாவண்யா என்ற மென்பொறியாளர் முதலிடம். 66 காலி பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வில் பெண்கள் அதிக இடங்களை கைப்பற்றி சாதனை.
குரங்கு அம்மை – எய்ம்ஸ் எச்சரிக்கை!
குரங்கு அம்மை நோயால் குழந்தைகளுக்கு மரணம் ஏற்படலாம் என எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை. கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு அலர்ட்.
அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். சாய்னா நெவால், ஹெச்.எஸ்.பிரணாய் காலிறுதியில் தோற்றனர்.
Comments are closed.