காலை உணவு திட்டம் குறித்து தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்திக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 31) கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். இதன்மூலம் தமிழகம் முழுவதும் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.
இந்தநிலையில் இத்திட்டம் குறித்து தினமலர் நாளிதழ் சேலம் பதிப்பகம் முதல் பக்கத்தில் “காலை உணவு திட்டம் மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு…ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது” என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது.
அந்த செய்தியில், “மாணவர்கள் காலையில் வீட்டில் சாப்பிடுகின்றனர். பள்ளிக்கு வந்ததும் அங்கும் சாப்பிடுகின்றனர். இதனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் இயற்கை உபாதைக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலரின் இந்த செய்திக்கு முதல்வர் ஸ்டாலின் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
உழைக்க ஓர் இனம் – உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.
'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி… pic.twitter.com/M8H94rVn68
— M.K.Stalin (@mkstalin) August 31, 2023
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“உழைக்க ஓர் இனம் – உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ எனச் சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.
‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே’ என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.
நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
சென்னையில் வீடுகள் விலை உயர்வு!
நள்ளிரவில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை: நெல்லையில் பயங்கரம்!
eveyone should reject dinamalam news
தமிழக மக்கள் தினமலர் நாளிதழை முற்றிலும் தவிர்க்க வேண்டும்