சிகாகோவில் புதிய முதலீடுகளை ஈர்த்த முதல்வர்: எந்த நிறுவனம்? எவ்வளவு கோடி?

Published On:

| By Kavi

டிரில்லியன்ட் நிறுவனம் ரூ.2000 கோடி மதிப்பில் தனது உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் விரிவாக்கம் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசுக்கும் டிரில்லியன்ட் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து  இன்று (செப்டம்பர் 5) ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ. 2000 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிறுவனத்தின் உற்பத்தி மையம் தமிழ்நாட்டில் நிறுவப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “நைக் நிறுவனத்துடன் காலணி உற்பத்தியை விரிவுபடுத்துவது மற்றும் சென்னையில் ஒரு தயாரிப்பு/வடிவமைப்பு மையத்தை அமைப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் 5,000 பேர் வேலை செய்து வரும் Optum நிறுவனத்துடன் ஆலோசனை நடைபெற்றது. திருச்சி மற்றும் மதுரையில் இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.

சான்பிரான்சிஸ்கோவில் மொத்தம் ரூ.1,300 கோடி முதலீட்டில் 4,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

செப்டம்பர் 3ஆம் தேதி சிகாகோவில், 500 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் ஈட்டன் நிறுவனத்துடன் 200 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நடிகர் விஜய் செலுத்திய வரி எவ்வளவு தெரியுமா?

பாலியல் புகார் உறுதியானால் 5 ஆண்டுகள் சினிமாவில் தடை!

Aus vs Sco: டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த ஆஸ்திரேலியா

கோலியா? தோனியா? அதிக வரிப் பணம் செலுத்தும் கிரிக்கெட் வீரர் யார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel