முதல்வர் ஸ்டாலினின் விசிட்டை தொடர்ந்து செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து நேற்று முதல் இன்று வரை ஏறத்தாழ 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இந்நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 15) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் இச்சம்பவம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார். அப்போது, மாவட்ட காவல் துறையும் அதன் ஒரு முக்கிய அங்கமான மதுவிலக்கு அமலாக்கப் பிரிவும் கள்ளச் சாராய ஒழிப்பு பணியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இதில் எவ்விதமான சமரசத்திற்கும் இடம் அளிக்க கூடாது என்று எச்சரித்துள்ளார்.
முதல்வரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பிரியா
எடப்பாடி அறிவிப்பு : விழுப்புரம் விரைந்த முதல்வர்!
ஜவாஹிருல்லாவுடன் காலால் ஒரு செல்ஃபி- யார் இவர்?