நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது… ஸ்டாலின் வைத்த சஸ்பென்ஸ்!

Published On:

| By christopher

நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியிட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 22) ட்விட் செய்துள்ளார்.

நிதியமைச்சர் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பக்கத்தில், “இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் ‘இரும்பின் தொன்மை’ எனும் நூலை வெளியிட்டு கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 10.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சி அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடை பெற உள்ளது. அனைவரும் வருக” என இன்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் அதனை குறிப்பிட்டு, ”நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது. வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார்.

மதுரை டங்க்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மத்திய அரசு தரப்பில் இருந்து நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என டெல்லியில் இருந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஸ்டாலினும் ‘நாளை முக்கிய அறிவிப்பு’ என ட்விட் செய்துள்ளது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share