36 வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் குஜராத்தில் செப்டம்பர் 29 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 12 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த போட்டிகளில் நாடு முழுவதும் இருந்து 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். போட்டிகள் குஜராத்தில் உள்ள அகமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பாவ்நகர் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதில் 74 பதக்கங்களுடன் தமிழ்நாடு 5வது இடம்பிடித்தது.
இதில் தமிழ்நாடு 5வது இடம் பிடித்ததற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 14 ) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “ 25 தங்கப் பதக்கங்கள் உட்பட 74 பதக்கங்களுடன் 36வது தேசிய விளையாட்டில் தமிழ்நாடு ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.
களத்தில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களது திறனை வெளிப்படுத்தி , கடும் உழைப்பினால் சிறப்பான முடிவுகளை வழங்கியுள்ள நமது தமிழக வீரர்களை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்.
அடுத்து வரும் போட்டிகளிலும் அவர்கள் வெற்றிபெற வாழ்த்துவதோடு, எனது முழு ஆதரவும் அவர்களுக்கு இருக்கும் என்ற உறுதியையும் அளிக்கிறேன்” என்று அதில் கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
குஜராத் தேர்தல்: தேதி அறிவிக்காததற்கு என்ன காரணம்?
தமிழகத்தில் பரவும் புதிய வைரஸ்கள்: அரசுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!