மகளிருக்கான உரிமைத்தொகையை முதல்வர் அறிவிப்பார்: அமைச்சர் உதயநிதி பரப்புரை !

அரசியல்

ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 21) பரப்புரை மேற்கொண்டார். அப்போது இன்னும் 5 மாதத்தில் மகளிருக்கான உரிமைத்தொகையை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்று கூறினார்.

அப்போது பேசிய அவர் ”அதிமுக அரசு 5 லட்சம் கோடி கடன் வைத்து விட்டு சென்றது. இன்னும் 5 அல்லது 6 மாதங்களில் மகளிருக்கான உரிமைத்தொகை வழங்கும் உத்தரவை முதல்வர் அறிவிப்பார். நான் உறுதி மொழி கொடுக்கிறேன்.. கண்டிப்பாக முதல்வர் உத்தரவு பிறப்பிப்பார்.. எடப்பாடி பழனிசாமி யாருக்காவது உண்மையாக இருந்து இருக்கிறாரா.. அண்ணாவினுடைய பெயரை கட்சியில் வைத்து இருக்கிறார்கள்.

அண்ணாவின் உருவத்தை கொடியில் வைத்து இருக்கிறார்கள். ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என்று அண்ணா சொல்லியிருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அந்த ஆளுநருக்கு ஜால்ரா அடித்துக் கொண்டு காவடி தூக்கிக் கொண்டு இருக்கிறார் என்றார்.

cm mk stalin tamilnadu

மேலும், 19 மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது. என்றைக்காவது ஒருநாள் ஆளுநரிடம் போய் மசோதாக்கள் நிலுவையில் இருப்பது பற்றி பேசி டெல்லிக்கு அனுப்புங்கள் என்று சொல்லியிருப்பாரா.. ஆளுநரை போய் சந்திப்பது. மோடியை சந்திப்பது எல்லாம் என்ன பிரச்சினைக்கு.. அவருடைய கட்சி பஞ்சாயத்துக்கு மட்டும் தான் போவார்.

இந்த ஈரோடு கிழக்கு தொகுதியில் கூட யார் வேட்பாளர், என்ன சின்னம் என்ற எல்லா பஞ்சாயத்தும் டெல்லியிலும் கமலாலயத்திலும் தான் நடைபெற்றது.

ஜே.பி.நட்டா மூன்று மாதங்களுக்கு முன் மதுரை வந்த போது 90 சதவீத எய்ம்ஸ் பணிகள் முடிவடைந்துவிட்டது என்றார்.

ஆனால் அங்கு இருந்தது ஒரு செங்கல் அதையும் நான் எடுத்து கொண்டு வந்து விட்டேன் இப்போது அந்த செங்கல்லை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்றார்

மு.வா.ஜெகதீஸ் குமார்

தொடரும் தாக்குதல்: என்ன நடக்கிறது ஜே.என்.யு.வில்?

மோதிக்கொண்ட பெண் அதிகாரிகள்: நடவடிக்கை எடுத்த கர்நாடக அரசு!

+1
0
+1
2
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0

1 thought on “மகளிருக்கான உரிமைத்தொகையை முதல்வர் அறிவிப்பார்: அமைச்சர் உதயநிதி பரப்புரை !

  1. உறுதி மொழி..அதுவும் நியி..நீட் லட்சணம் பார்த்து தான் இருக்கோம்…மானங்கெட்ட மந்திரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *