வேலூரில் இன்று காலையிலேயே முதல்வர் ஸ்டாலின் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று வேலூர் புறப்பட்டுச் சென்றார்.
முதலில் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இதையடுத்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள், வணிகர்கள், லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டு அறிந்தார். பின்னர் வேலூர் சரக மாவட்டங்களில் சட்ட ஒழுங்கு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நேற்றைய நிகழ்வுகளை முடித்துக் கொண்டு தனியார் ஹோட்டலில் இரவில் தங்கிய முதல்வர் ஸ்டாலின் இன்று காலையிலேயே ஆய்வுக்குக் கிளம்பினார்.
அதன்படி சத்துவாச்சாரி ஆதிதிராவிடர் ஆரம்ப பள்ளிக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்குச் சமைக்கப்படும் உணவின் தரம் குறித்துச் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.
பின்னர் அங்கிருந்த மாணவர்களுக்கு உப்புமா பரிமாறி, ருசி தரம் எப்படி இருக்கிறது என கேட்டறிந்து மாணவர்களுடன் உரையாடினார்.
அதுபோன்று மாணவர்களுக்கு வழங்கும் உணவை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் சமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வேலூர் மண்டல ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர்கள், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
பிரியா
ஈபிஎஸ் இடையீட்டு மனுவை எதிர்த்து ஓபிஎஸ் மனு!
விஞ்ஞான முறையில் ஆவின் பால் விலை உயர்வு?