திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. யின் கணவர் அரவிந்தன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சில தினங்களுக்கு முன்பு அவரை சந்தித்து உடல்நலம் விசாரிப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் சென்று இருக்கிறார்.
அப்போது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் பொதுச் செயலாளரான கே. டி. ராகவன் உடல் நலக்குறைவால் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் முதலமைச்சருக்கு தெரியவந்திருக்கிறது.
அந்த வகையில் தனது தங்கையின் கணவரது ஹெல்த் பற்றி விசாரித்து விட்டு அப்படியே கே. டி. ராகவனின் உடல் நலத்தையும் விசாரித்து அறிந்து கொண்டு புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.
பவர்ஃபுல்லாக இருந்த கே. டி. ராகவன் சமீப காலங்களாக பாஜகவின் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தாலும் அவரது டெல்லி தொடர்புகள் தொடர்ந்து வலுவாகவே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
வேந்தன்
பல்லை பிடுங்கிய ஏஎஸ்பியின் பதவியை பிடுங்கிய அஸ்ரா கார்க்
இறையன்புவுக்கு புதிய பதவி: ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில் தாமதமா?