கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.
தமிழகத்தில் குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய்த் துறை வழங்கக்கூடிய சேவைகள், ஊரக மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர் திறன் மேம்பாடு, பொதுக் கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து,
சட்டம் ஒழுங்கு போன்ற முக்கிய துறை சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பயன்கள் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்றடைவது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
இதற்காகக் ’கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைக்கவுள்ளார்.
முதற்கட்டமாக வரும் பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்களில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
முதல்வரின் இந்த கள ஆய்வின் போது முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் இடம் பெறுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பிரியா
டாஸ்மாக் விருது சர்ச்சை : அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!
தில் ராஜு பாணியில் கல்யாண பேனர்: இணையத்தில் வைரல்!