சென்னையில் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் வீட்டுக்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 17) ஆறுதல் தெரிவித்தார்.
சென்னை கொளத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாகக் கால் அகற்றப்பட்டு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா கடந்த 15ஆம் தேதி உயிரிழந்தார்.
பிரியா மரணம் தொடர்பாக, தாமாக முன்வந்து தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த மரணம் தொடர்பாக 6 வாரங்களில் பதில் அளிக்க தமிழக சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (நவம்பர் 17) காலை சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரியாவின் வீட்டுக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது, அரசு வேலைக்கான பணி ஆணை, நிவாரணத் தொகை ஆகியவற்றை வழங்கினார்.
இந்த சந்திப்பின்போது, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பிரியா
விண்ணை முட்டும் சரணகோஷம்: விரதத்தை தொடங்கிய பக்தர்கள்!
கால்பந்து உலகக்கோப்பை : வரலாற்று பெருமையில் நனையும் கத்தார்!