புதிதாக கட்டப்பட்டுள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள் மற்றும் வீட்டு வசதி வாரிய அலுவலகங்களை கணொளி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஆகிய இடங்களில் ரூ. 5.34 கோடி மதிப்பீட்டில் இரண்டு புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டிடங்கள் ஓட்டுநர் தேர்வு தளத்துடன் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
வேலூர், திருச்சி, மதுரை தோப்பூர் ஆகிய இடங்களில் வீட்டு வசதி வாரிய அலுவலக கட்டிடங்களும், மதுரை உச்சபட்டியில் விருந்தினர் மாளிகை கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது. இவை மொத்தம் 26 கோடி 33 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் போக்குவரத்து துறை மற்றும் வீட்டு வாரிய வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலமாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர், தலைமை செயலாளர், உள்துறை கூடுதல் செயலாளர், வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர், வீட்டு வசதி வாரியத் தலைவர், நிதியமைச்சர் ஆகியோர் முதல்வருடன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

போக்குவரத்து மோட்டார் வாகன அலுவலகம் மூலம் ஓட்டுநர் உரிமம், பழகுநர் உரிமம், நடத்துநர் உரிமம், பதிய வாகன பதிவு , வாகன தகுதிச்சான்றிதழ் புதுப்பித்தல் ஆகிய சேவைகள் பொதுமக்களுக்கு செய்துத் தரப்படும். செஞ்சியில் கட்டப்பட்டுள்ள அலுவலகம் மூலம் தமிழகத்திற்கு ஆண்டிற்கு 7 கோடி 57 லட்சம் வருமானமும், சீர்காழியில் உள்ள அலுவலகம் மூலம் ஆண்டிற்கு 9 கோடி 4 லட்சம் வருமானமும் ஈட்டப்பட உள்ளது.
மோனிஷா
பெட்ரோல்-டீசல்-ஜிஎஸ்டி: நிர்மலாவுக்கு பிடிஆர் பதில்!