28 வருடங்களுக்கு பின்னர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனைக்குச் சென்ற முதலமைச்சர், பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் மனம் எனும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளிடையே ஏற்படக்கூடிய தற்கொலை தொடர்பான சிந்தனை , மன அழுத்தம் , போதை பழக்கங்கள் ஆகியவற்றை தவிர்க்கும் வகையில் மனநலம் தொடர்பான உளவியல் ஆலோசனைகள் வழங்கும் விதமாக மனநல நல்லாதரவு மன்றம் என்ற மனம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் தொடங்கி வைத்தார். 14416 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகள் பெறும், நட்புடன் உங்களோடு மனநல சேவை திட்டத்தின் விரிவாக்கத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் இடைநிலை பராமரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளையும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு 75 அவசரகால ஊர்திகளையும் கொடியசைத்து முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா உட்பட மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
28 வருடங்களுக்கு பின்னர் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது. 1970ம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த கலைஞரும், 1994ல் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவும் இங்கு ஆய்வு மேற்கொண்டிருந்தனர்.
கலை.ரா
கொரோனா தாக்கம்: கலக்கத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்
கிறிஸ்துமஸ் ஆம்னி பஸ் கட்டணம் : அதிர்ச்சியில் பயணிகள்!