முதலமைச்சர் காலை உணவு திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
முக்கிய அறிவிப்புகள்:
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மதுரை, திருச்சி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் விடுதிகள் கட்டப்படும்.
முதலமைச்சர் காலை உணவு திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
சர்வதேச புத்தக கண்காட்சி வரும் ஆண்டிலும் நடத்தப்படும்.
அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகள் 2,783 கோடி செலவில் திறன்மிகு மையங்களாக தரம் உயர்த்தப்படும்.
குடிமைப் பணி தேர்வு மாணவர்களுக்கு முதல் நிலை தேர்வுக்கு தயாராவதற்காக மாதம் ரூ.7500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செல்வம்
பாலியல் அத்துமீறல்: பாதிரியார் பெனடிக் ஆன்றோ கைது!
இலங்கை தமிழர்களுக்கு வீடு: ரூ.233 கோடி ஒதுக்கீடு!