முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
காலநிலை செயல்திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற நிறுவனம் என்ற அமைப்பு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கொள்கை வழிகாட்டுதலை வழங்கவும், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை கணிக்கவும் முதலமைச்சர் தலைமையில் நிர்வாக குழு அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் தலைமையிலான குழுவில் பொருளாதார நிபுணர் மாண்டேக் சிங் அலுவாலியா, இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் நந்தன் எம்.நிலக்கேனி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று தமிழக அரசின் மூத்த அரசு செயலாளர்கள், காலநிலை மாற்றம் தொடர்பான வல்லுநர்கள் குழுவின் உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மாநில காலநிலை மாற்ற செயல்திட்டத்தினை உருவாக்கி அதனை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை இக்குழு தயாரிக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
கலை.ரா
ஜெயம் ரவிக்கு மீண்டும் கொரோனா!
தினேஷ் கார்த்திக்கை பார்த்து அசந்துபோன ஆஸ்திரேலிய ஜாம்பவான்! என்ன சொன்னார் தெரியுமா?