மாமன்ற கூட்டத்தில் திமுகவினரிடையே மோதல்!

அரசியல்

திருநெல்வேலி மாநகராட்சியில் நேற்று (ஜனவரி‌ 30) நடந்த சிறப்பு கூட்டத்தில் தி.மு.க கவுன்சிலர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி இராஜாஜி அரங்கில் மேயர் பி. எம் சரவணன்  தலைமையில் மாநகராட்சி ஆணையர் வ. சிவகிருஷ்ணமூர்த்தி , துணை மேயர் கே. ராஜு ஆகியோர் முன்னிலையில்  மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் மாநகராட்சியில் செயல்படுத்தப்படவுள்ள பல்வேறு திட்டங்கள் தொடர்பாக தீ்ர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாநகர திமுக கவுன்சிலர்கள்  இரண்டு கோஷ்டியினராக செயல்பட்டு பெரும் கூச்சல் போட்டனர். தி.மு.க., கவுன்சிலர்கள் சுந்தர் மற்றும் ரவீந்தருக்கிடையே மோதல் ஏற்பட்டது.

திமுக கவுன்சிலர் ரவீந்தர் பேசுகையில், “மாநகர செயலாளர் சுப்ரமணியன், பகுதி செயலாளர் செல்லத்துரை ஆகியோர் தினமும் மாநகராட்சியில் மேயர் அறையில் மணிக்கணக்கில் உட்கார்ந்து காண்ட்ராக்டர்களிடம் பேசுகின்றனர். எனவே அவர்களை நீண்ட நேரம் இருக்க அனுமதிக்ககூடாது.” என்றார். 

இதுகுறித்து பேசிய கமிஷனர், “இந்த பிரச்சனையில் தேவைப்பட்டால் போலீசில் புகார் செய்யப்படும்.” என்றார்.

இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்புடன் மாமன்ற கூட்டம் முடிவடைந்தது.

சக்தி

விழிப்புணர்வு வீடியோக்கள்: டிவி சேனல்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்!

அமெரிக்க – பார்ப்பனிய ஏகாதிபத்திய முரணும் சுயாட்சிக்கான வாய்ப்பும்–பகுதி1

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *